Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்த மாதம் 8ம் தேதி வரையில் பருவமழை குறைவாகவே இருக்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில் இம்மாதம் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாகவே பெய்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் இயல்பாக 34 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும் ஆனால் 91% குறைவாக 3 மில்லி மீட்டர் மட்டுமே பெய்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் 16 மாவட்டங்களில் மழை பெய்யவில்லை 22 மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவாகவே மழை பெய்திருக்கிறது. அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நவம்பர் மாதம் 23ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இயல்பான 33cm மழை பெய்திருக்க வேண்டும். இருந்தாலும், 4 சதவீதம் அதிகமாக 31.7 சென்டிமீட்டர் பதிவாகியிருக்கிறது.

சென்ற 2 வாரங்களில் முதல் வாரத்தில் இயல்பை விட 17 சதவீதம் அதிகமாகவும், அடுத்த வாரத்தில் இயல்பை விட 10 சதவீதம் குறைவாகவும் மழை பெய்திருக்கிறது. இந்த மாதம் இயல்பை ஒட்டி தான் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.

டிஜிட்டல் தரவுகள் தொடர்பான கணிப்பின் அடிப்படையில் அடுத்து வரும் 2 வாரங்களில் டிசம்பர் மாதம் 8ம் தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் இயல்பை விட குறைவாகவே பெய்யும். இந்த மாதம் 29ஆம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version