Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாத சம்பளம் 8000,மின்கட்டணம் 6000! சேலத்தில் ஏற்பட்ட அவலம்!

monthly-income-8000-but-eb-bill-6000-in-salem

monthly-income-8000-but-eb-bill-6000-in-salem

சேலம் மாவட்டம் சேலத்தாம்பட்டியில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.இங்கு கடந்த இரண்டு மாதமாக வீட்டின் மின் கட்டணமானது மிக அதிக அளவில் இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இங்கு வாழும் பொதுமக்கள் பெரும்பாலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.இந்த குடியிருப்பில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.அதில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக உள்ளனர்.இதனால் தங்கள் அன்றாட தேவைகளுக்கே அவர்களின் வருமானம் சரியாக இருக்கும்.மேலும் கொரோனா காலகட்டத்தில் இவர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

குடியிருப்பு வாசிகள் வீட்டிற்கு மாத வாடகையாக 250 ரூபாய் செலுத்த வேண்டும் என குடிசை மாற்று வாரியம் நிர்ணயம் செய்துள்ளது.மேலும் அவர்கள் வீடுகளில் அடிப்படை மின் சாதன பொருட்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.அதனால் மின்கட்டனமானது அவர்களுக்கு பெரிதாக வர வாய்ப்பில்லை.இதனிடையே கடந்த இரண்டு மாதமாக அவர்கள் எதிர்பார்த்திடா வண்ணம் மின்கட்டணம் வந்துள்ளது.

இங்குள்ள பல வீடுகளில் குறைந்தபட்சம் 2000 ரூபாய் முதல் அதிகபட்சம் 6000 ரூபாய் வரை மின்கட்டணம் வந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.அந்த அளவுக்கு தாங்கள் மின்சாரத்தை பயன்படுத்தவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனையடுத்து அம்மக்கள் தங்கள் பகுதி மின் வாரிய அலுவலர்களிடம் அதிக மின்கட்டணம் வருவதை பற்றி கூறியும் அவர்கள் அதற்கு எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை.இதனால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த வருத்ததுடன் இருக்கின்றனர்.

இது குறித்து சேலத்தாம்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகளின் எதிர்பார்ப்பு என்னவென்றால் மாவட்ட நிர்வாகமும் மின் வாரியமும் உடனே தலையிட்டு இந்த மின் கட்டணத்தை சீர்படுத்த வேண்டும் என்பதாக இருக்கிறது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் மற்ற பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

Exit mobile version