Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அக்னிபத் திட்டத்தில் இணையம் இளைஞர்களுக்கு அதிரடி சலுகை வழங்கிய மத்திய அரசு! அறிவிப்பை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 வருடங்களுக்கு மட்டும் ஒப்பந்தத்தினடிப்படையில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் தற்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது பீகாரில் சாலை மறியலில் ஆரம்பித்த இந்த போராட்டம் தற்போது பல மாநிலங்களில் மிகப்பெரிய வன்முறையாக வெடித்திருக்கிறது.

பிகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 தொடர் வண்டிகளை தீயிட்டு போராட்டக்காரர்கள் கொளுத்தினர் இன்று 4வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இதுவரையில் 12 தொடர்வண்டிகள் எரிக்கப்பட்டுள்ளன. அதேபோல தொடர்வண்டி நிலையங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற வலைதளபதிவில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் அசாம் ரயில்களில் ஆள்சேர்ப்பு காக அக்னி வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 3 வருடங்கள் வரையில் தளர்வு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அக்னி வீரர்களின் முதல் பேட்சுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 5 வருடங்கள் வரையும் தளர்வு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version