Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆய்வகத்தில் இருந்து மாயமான வைரஸ் மாதிரிகள்!! அச்சத்தில் உறைந்த உலக நாடுகள்!!

More than 300 mysterious virus samples from Australia lab

More than 300 mysterious virus samples from Australia lab

Australia: ஆஸ்திரேலியா ஆய்வகத்தில் இருந்து மாயமான 300க்கு மேற்பட்ட வைரஸ் மாதிரிகள்.

கொரோனா வைரஸை விட பல மடங்கு ஆபத்தை உண்டாக்கும் வைரஸ் ஆஸ்திரேலியா ஆய்வகத்தில் இருந்து காணாமல் போய் இருப்பது உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 2019ஆம் ஆண்டின் கடைசியில் சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனா வூஹான் மாகாணத்தில் இருக்கும் வைரஸ் ஆய்வகத்தில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது.

அதே போன்று  கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வைரஸ் மாதிரிகள் ஆஸ்திரேலியா நாட்டின் ஆய்வகத்தில் இருந்து காணாமல் போய் இருக்கிறது. குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள அரசு வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இருந்து மிகவும் ஆபத்தான 300க்கு மேற்பட்ட வைரஸ் மாதிரிகள் மாயமாகி இருக்கிறது.

அந்த மாதிரிகளில் ஹெண்ட் ரா வைரஸ், லைசா வைரஸ், ஹண்டா வைரஸ் போன்றவைகள் இருக்கிறது. ஹெண்ட் ரா வைரஸ் என்பது விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடிய ஒரு வகை வைரஸ் ஆகும். இது ஆஸ்திரேலியா நாட்டில் மட்டும் காணப்பட்டு  இருக்கிறது. லைசா வைரஸ் என்பது ஒரு ரேபிஸ் நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்த வைரஸ் மாதிரிகள் குளிரூட்டியில் இருந்து வெளியே எடுத்தால் வெப்பம் சூழல் காரணமாக இறந்து விடும். வைரஸ் காணாமல் போய் ஒரு வருட காலம் ஆனாலும் கூட அதன் பாதிப்புகள் பற்றி எவ்வித தகவலும் வரவில்லை என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த வைரஸ் மாதிர்கள் எப்படி மாயமாகி இருக்கும், அதை எடுத்தது யார் என்ற கோணத்தில் அந்நாட்டில் விசாரணை நடந்து வருகிறது.

Exit mobile version