பிராந்திய ராணுவம் சிப்பாய்,கிளார்க் மற்றும் டிரேஸ்மேன் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 4000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையில்லை.
அதற்கு பதிலாக நவம்பர் 4 முதல் டிசம்பர் 12, 2024 வரை நடைபெற உள்ள TA ராணுவ பாரதி பேரணி 2024- இல் அவர்கள் நேரில் கலந்து கொள்ள வேண்டும். இந்த தேர்வு முறைக்கானஇணையதளம் https://www.jointerritorialarmy.gov.in/. மேலும் இதற்கான தேர்வு செயல்முறை என்பது உடல் தரநிலை தேர்வு, உடல் திறன் தேர்வு,மருத்துவ பரிசோதனை,வர்த்தக சோதனை, எழுத்து தேர்வு,ஆவண சரிபார்ப்பு ஆகிய முறைகளில் தேர்வு நடத்தப்படும்.
இதற்கான கல்வித்தகுதி சிப்பாய் (கிளார்க்) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10, 12-ம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சோல்ஜர் டிரேட்ஸ்மேன் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10 -ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் பிராந்திய ராணுவத்தில் பதிவுகளை பொருத்து அடிப்படை சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 42 வயது வரை.
இந்த நிலையில் பிராந்திய ராணுவ மண்டலத்தில் ஆந்திர பிரதேசம், குஜராத்,கேரளா,தமிழ்நாடு,மகாராஷ்டிரா,கர்நாடகா,ராஜஸ்தான்,தெலுங்கானா,கோவா ஆகிய மாநிலங்களும் தாத்ரா மற்றும் லட்சத்தீவு, பாண்டிச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களும் அடங்கும். இதற்கான தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.