Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பறிமுதல் செய்யப்பட்ட 50 மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் தீயில் கருகி சேதம்! இரு சடலங்கள் மீட்பு!

More than 50 confiscated motor vehicles were burnt and damaged! Rescue two corpses!

More than 50 confiscated motor vehicles were burnt and damaged! Rescue two corpses!

பறிமுதல் செய்யப்பட்ட 50 மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் தீயில் கருகி சேதம்! இரு சடலங்கள் மீட்பு!

நாகை மாவட்டம் காடம்பாடி என்ற பகுதியில் பழைய ஆயுதப்படை மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் மது மற்றும் இதர குற்றங்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நிறுத்தப்படும்.அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் அவ்வப்போது திருட்டுப்போவதும் வழக்கமான ஒன்றுதான்.இன்று யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 க்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்துள்ளது.

மூன்று நான்கு சக்கர வாகனங்களும் தீயில் இருந்து நாசமடைந்துள்ளது. வாகனங்கள் மட்டுமின்றி இருவர் உடலும் தீயணைப்பு துறையினர்  சடலமாக மீட்டு உள்ளனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தும் தீயை குறைக்க முடியவில்லை. முழுமையாக தீ அணைந்த  பிறகு தான் இன்னும் எத்தனை பொருள்கள் சேதம் அடைந்தது என்பதை கண்டறிய முடியும்.அதுமட்டுமின்றி இந்த தீ எவ்வாறு பரவியது என்பதை போலீசார் விசாரணை செய்தும் வருகின்றனர்.

Exit mobile version