விஷ தேள்கள் கொட்டி தீர்ப்பதால் 500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு! காரணம் இதுதானாம்!
தற்போது பருவநிலை மாறுபாட்டின் காரணமாக உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏதோ ஒரு இயற்கை பாதிப்பு ஏற்பட்டு மக்களை பாதித்து வருகிறது. அதன் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் வருகிறது. ஒன்றா எரிமலை வெடித்து சிதறி அதனால் எரிமலை குழம்பு கடலில் கலக்கிறது. அல்லது கன மழை பெய்து மாநிலமே நீரில் மூழ்கும் அபாயம் தொடர்கிறது. சுனாமி பேரலை மற்றும் நிலச்சரிவு போன்ற பல்வேறு பாதிப்புகளும் உலகம் வேப்பமடைவதால் தான் நிகழ்கின்றன என்று பல அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பல வருடங்களாக பனிக்கட்டிகள் உருகி வருகிறது. அதன் மூலமும், அதன் காரணமாகவும் உலகம் வெப்பமயமாதலை அறிவியலாளர்கள் கணித்து தெரிவிக்கின்றனர். இதேபோல் எகிப்து நாட்டில் அஸ்வான் மாகாணத்தில் தற்போது ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதனால் பலரது வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என அனைத்தும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
அதன் காரணமாக பல்வேறு இடங்களில் இருந்தும் தேள்கள் அதன் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி தெருக்களிலும் வீதிகளிலும் வீதி உலா நடத்தி வருகின்றன. எனவே அங்கு மட்டும் இதுவரை 500 க்கும் மேற்பட்டோரை தேள்கள் கடித்து விட்டதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தற்போது சிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்பி வருவதாகவும் அவர் தகவல்களை கூறினார்.
மேலும் இதன் காரணமாக 3 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாகவும், மற்றொரு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் இறந்து போக எப்படி எல்லாம் ஒரு காரணம் கண்டுபிடிக்கிறான் இறைவன். நாம் இயற்கைக்கு செய்த கொடுமைகளை நிறுத்தி விட்டு இனி மரங்களை நட்டு இயற்கையை அன்போடு பாதுகாப்போம்.