சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபாரத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் 6724 காலி பணியிடங்களை கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகினர்.
இந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றுகளை பதிவேற்றம் செய்ய டிசம்பர் 21-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 10 வேலை நாட்களுக்குள் கலந்தாய்விற்கான பட்டியல் மற்றும் தேதிகள் அறிவிக்கப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வுக்கான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டது.
மேலும் இந்த கலந்தாய்வுகளில் கலந்து கொள்ளாதவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சான்றிதழ் சரி பார்த்து சரியாக நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி மேலும் 41 இடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்துள்ளது.