300க்கும் மேலான நோய்களை குணமாக்கும் முருங்கை! இதன் நன்மைகள் என்னென்ன!!

0
96
#image_title
300க்கும் மேலான நோய்களை குணமாக்கும் முருங்கை! இதன் நன்மைகள் என்னென்ன
300க்கும் மேலான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்ற முருங்கை கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கீரைகளில் மிக முக்கியமான கீரை என்று சொன்னால் அது முருங்கைக் கீரை என்று கூறலாம். முருங்கை கீரையின் இலை, பூ, விதை, பட்டை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. வேப்ப மரம் எப்படி மருந்தாக பயன்படுகின்றதோ அதே போல முருங்கை மரமும் மருந்தாக பயன்படுகின்றது.
முருங்கை காலையில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. நமது உடலுக்குத் தேவையான பல வகையான ஊட்டச்சத்துக்கள் இந்த முருங்கைக் காலையில் உள்ளது. முருங்கைக் காலையில் உடலுக்குத் தேவையான விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி, விட்டமின் டி, விட்டமின் இ, பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து, புரோட்டீன் ஆகிய. சத்துக்கள் உள்ளது. முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
முருங்கை கீரையின் நன்மைகள்…
* முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் இரத்தம் விருத்தியாகும். உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
* முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் தோள்பட்டை வலி, இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற வலிகள் குறையும்.
* முருங்கைக் கீரையில் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் இது நம் பற்களுக்கு வலிமை அளித்து உறுதிபடுத்துகின்றது. எலும்புத் தேய்மானத்தை தடுக்கின்றது.
* முருங்கைக் கீரையை சாப்பிட்டு வரும் பொழுது வாய்ப்புண், அல்சர் பிரச்சனைகள் குணமாகின்றது.
* முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் மங்கலான பார்வை தெளிவாகும்.
* சளித் தொல்லை, தலைவலி போன்ற பிரச்சனைகளை காணப்படுத்தவும் முருங்கைக் கீரையை சாப்பிட்டு வரலாம்.
* புற்றுநோயை கூட குணப்படுத்தும் ஆற்றல் இந்த முருங்கைக் கீரையில் உள்ளது.
* மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் அனைவரும் இந்த முருங்கைக் கீரையை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமடையும்.
* குழந்தை பெற்ற தாய்மார்கள் முருங்கைக் கீரையை சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
இந்த முருங்கை கீரயை பொறியலாகவும், சூப் செய்தும், குழம்பு செய்தும், வடை செய்தும் சாப்பிடலாம். வாரத்திற்கு இரண்டு முறை முருங்கைக் கீரை அல்லது காய் இரண்டில் எதாவது ஒன்றை சாப்பிட வேண்டும்.