Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்!

#image_title

“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்!

தற்பொழுது உள்ள வாழக்கை முறையில் சர்க்கரை வியாதியானது சளி, காய்ச்சல் போல் எளிதில் வந்து விடுகிறது. இந்த வியாதி நம் அப்பா, தாத்தா உள்ளிட்ட இரத்த உறவுகளுக்கு இருந்தால் நமக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

வாயை கட்டுப்படுத்த முடியாமல் அதிக இனிப்பு உண்பது, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றாலும் ஏற்படக் கூடியது.

சர்க்கரை நோய் மனிதரை வெகுவாக கரைத்து விடும்.. ஒரு சிலருக்கு உடல் எடை குறையும்.. ஒரு சிலருக்கு உடல் எடை கூடும்.

இந்த சர்க்கரை நோயை மாத்திரை, மருந்து மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றாலும்.. முருங்கை, கறிவேப்பிலை, நெல்லிக்காய் ஆகியவற்றை பயன்படுத்தி இயற்கை முறையிலும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்…

*முருங்கை இலை – 1 கப்
*கறிவேப்பிலை – 1 கப்
*நெல்லிக்காய் – 10

முருங்கை கீரையை அலசி ஒரு காட்டன் துணியில் பரப்பி நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.

அடுத்து ஒரு கப் உலர்த்திய கறிவேப்பிலை மற்றும் விதை நீக்கிய 10 உலர்த்திய நெல்லி துண்டுகளை மிக்ஸியில் போடவும். அடுத்து உலர்த்திய முருங்கை இலையை அதில் சேர்த்து இந்த 3 பொருட்களையும் அரைத்து பொடியாக்கவும்.

இதை ஒரு பாட்டிலில் கொட்டி வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை…

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் அளவு அரைத்த பொடி மற்றும் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி குடிக்கவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். இவ்வாறு குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

Exit mobile version