Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முந்நூறு நோயை விரட்டும் முருங்கை..! “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்..?

moringa oleifera in tamil

moringa oleifera in tamil

முந்நூறு நோயை விரட்டும் முருங்கையின் பயன்கள் ( moringa oleifera in tamil ) குறித்தும், “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்” என்ற பழமொழியின் அர்த்தத்தையும் இங்கு பார்க்கலாம்.

கீரைகளின் ராணி:

முருங்கை மரத்தின் புகழையும், பயனையும் யாரும் முழுமையாக அறிந்து கொள்வதில்லை. “கீரைகளின் ராணி” என்று அழைக்கும் மகத்துவம் முருங்கை கீரைக்கு மட்டுமே உண்டு. ஏனெனில், முருங்கை பல்வேறு மருத்துவ குணங்களை உடைய இயற்கை மருத்துவமாகும்.

முருங்கையை நட்டவர் வெறுங்கையோடு நடப்பார்” என்றொரு பழமொழி உண்டு. இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் பலருக்கு தெரிவதில்லை. முருங்கையை நட்டால் வெறுங்கைதான் மிஞ்சும், வறுமைதான் மிஞ்சும் என்று தவறாக சொல்லப்படுகிறது.

“முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்” என்றால், மனிதன் முதிர்ந்த வயதிலும் கோலூன்றாமல் ஆரோக்கியமாக இரு கைகளையும் வீசி நடப்பான் என்பதே உண்மையா பொருள்.

வீட்டில் உள்ள முருங்கை மரத்தை வெட்டுவது ஏன்?

வீட்டிற்கு முன் பக்கம் வைத்தால் முனி வரும் என்றும், பின் பக்கம் வைத்தால் பேய் வரும் என்று கிராமங்களில் பேசப்படுவதை கேட்டு சிலர் முருங்கை மரத்தை வெட்டவும் செய்கிறார்கள்.

இது மிகத்தவறான விஷயம். முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்து பழமொழி. முருங்கையில் இலை, பூ, காய் என எல்லாமே இயற்கை மருத்துவ குணம் கொண்டவையாகும்.

முருங்கையின் பயன்கள் : murungai keerai benefits in tamil

மேலும் படிக்க: அலர்ட்! முருங்கை கீரையில் தீமையும் உள்ளதா? Murungai Keerai Theemaigal in Tamil

குறிப்பு : பல்வேறு நோய்களை விரட்டும் முருங்கையை நாம் தவிர்க்கவே கூடாது.

Exit mobile version