முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்த மோசடி மன்னன்!
உத்தர பிரதேசம் மாநிலத்தின் சாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் பங்கஜ் குமார் (வயது 30). இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். மஞ்சுவுக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய பங்கஜ் குமார் தீர்மானித்தார்.
இதையடுத்து திட்சாரி என்ற கிராமத்தில் நேற்று பங்கஜ் குமாரின் இரண்டாவது திருமணவிழா நடைபெற்றது.
அப்போது தனது குடும்பத்தாருடன் அங்கு சென்ற சென்ற பங்கஜின் முதல் மனைவி மஞ்சு மணமேடையில் இருந்த பங்கஜ் குமாரை அடி வெளுத்து வாங்கினார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் மஞ்சுவின் குடும்பத்தினர் பங்கஜ் குமாரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பங்கஜ் குமாருக்கு எதிராக மீரட் நகர் காவல்நிலையத்தில் வரதட்சணை மற்றும் குடும்ப தகராறு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீசார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.