வீட்டுக்குள் கொசு வரவே வராது! இந்த இலை இருந்தால் போதும்!
அனைவரது வீட்டிலும் இந்த கொசுவானது இருக்கிறது. கொசுக்கள் கடித்தால் பலவிதமான நோய்களை உண்டாக்குகிறது. கொசுக்கள் வராமல் இயற்கையான முறையில் எவ்வாறு தடுப்பது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக கொசுபத்தியை பயன்படுத்தினால் நம் உடலுக்கு தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல், சுவாசப் பிரச்சனை, போன்ற பல்வேறு வகையான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. முதலில் வேப்ப எண்ணையை 3 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 1 டீஸ்பூன் அளவு பொடியாக்கிய கற்பூரத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு நம் உணவிற்கு பயன்படுத்தும் பிரியாணி இலையை எடுத்து அதன் மேல் இந்த எண்ணெயை தடவிக்கொள்ள வேண்டும். தடவிய பிறகு அந்த இலையில் தீ பற்றி விட வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது அதிலிருந்து வரக்கூடிய புகையானது. கொசுக்களை உடனடியாக சாகடித்து விடும். மேலும் இந்த எண்ணெயை பயன்படுத்தி தீபம் ஏற்றினால் மிகவும் நல்லது. நாம் உறங்கும் அறையில் தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும் அவ்வாறு செய்தால் கொசுக்கள் வரவே வராது.