சந்தையில் பலவித சிறப்பம்சங்களுடன், மாறுபட்ட விலை மதிப்புகளுடன் ஸ்மார்ட்போன்கள் வந்துகொண்டே இருக்கின்றது. ஸ்மார்ட்போன்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சந்தையில் ஐபோன்கள் சற்று விலை உயர்ந்ததாக தான் இருந்து வருகின்றது, ஆனால் இப்போது நாம் பார்க்கப்போகும் ஐபோனின் விலையை கேட்டால் அனைவருக்கும் நெஞ்சு வலியே வந்துவிடும். 2021-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஃபால்கன் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டயமண்ட் ஸ்மார்ட்போனானது ஆரம்ப விலையே ரூ.360 கோடியாக விற்பனைக்கு வந்தது.
நியூயார்க்கில் உள்ள ஃபால்கன் பல உயர்தர பொருட்களை தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் அரச தலைவர்கள், பிரபல நடிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் ஆவார்கள். ஃபால்கன் வைரங்கள் மற்றும் 24 காரட் தங்கத்தால் பூசப்பட்ட ஆடம்பரப் பொருட்களில் நிபுணத்துவம் பெற்றது. அதன் சொந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான முறையில் தயாரித்து நேரடியாக அனுப்புகிறது.
இந்த வெர்ஷன் 4.7-இன்ச் மற்றும் 5.5-இன்ச் ஸ்க்ரீன் டயக்னலை கொண்டுள்ளது. மொபைலின் முழு உடலும் பிளாட்டினம் அல்லது 18 அல்லது 24 காரட் ரோஸ் தங்கம் கொண்டு வடிவமைக்கும் இரண்டு ஆப்ஷன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மொபைலின் ஆப்பிள் லோகோவிற்கு கீழே ஒரு செவ்வக வடிவ பெரிய இளஞ்சிவப்பு வைரம் உள்ளது, அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வெவ்வேறு ஹோல்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வைரத்தின் அளவு தொலைபேசியின் அமைப்புகளைப் பொறுத்தது, இது 128 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது.