Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவனின் கைகளை உடைத்த தாய்!!! ஆந்திராவில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!! 

#image_title

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவனின் கைகளை உடைத்த தாய்!!! ஆந்திராவில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!!
ஆந்திரா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற சிறுவனை தாய் ஒருவர் சூடு வைத்து கைகளை உடைத்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்து இருக்கின்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள மாச்சரலாவை சேர்ந்த கடற்படை வீரர் தற்பொழுது ஒடிசாவில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மற்றும் 5 வயது மகன் இருவரும் மாச்சரலாவில் வசித்து வருகின்றனர். கடற்படை வீரர் விடுமுறை தினங்களில் மட்டும் மாச்சரலாவில் வசித்து வரும் மனைவி மற்றும் மகனை பார்க்க வருவார்.
இந்நிலையில் கடற்படை வீரரின் மனைவிக்கு அதே பகுதியில் உள்ள வாலிபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த வாலிபருடன் இருக்க ஆசைப்பட்ட கடற்படை வீரரின் மனைவிக்கு பெற்ற மகன் (5 வயது சிறுவன்) தடையாக இருந்துள்ளான். இதையடுத்து அந்த பெண் சிறுவனின் கை மற்றும் கால்களில் சூடு வைத்துள்ளார். மேலும் சிறுவனின் கைகளை பின்னோக்கி வளைத்து கைகளை உடைத்துள்ளார்.
மேலும் வாளியில் தண்ணீர் நிரப்பி சிறுவனின் தலையை வாளிக்குள் இருக்கும் நீரில் மூழ்கியது சித்ரவதை செய்துள்ளார். இதை அனைத்தையும் கடற்படை வீரரின் மனைவி செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
இந்நிலையில் கடற்படை வீரரின் மனைவிக்கும் அந்த வாலிபருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விரக்தி அடைந்த கடற்படை வீரரின் மனைவி தன் செல்போனில் பதிவு செய்த வீடியோக்களை தன் கணவருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த வீடியோவை பார்த்த கடற்படை வீரர் அதிர்ச்சியடைந்தார். மேலும் ஆந்திர மாநிலம் மாச்சரலாவிற்கு வந்த கடற்படை வீரர் குழந்தையை தன்னுடன் அழைத்து சென்றார். மேலும் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினர்.
கள்ளக் காதலுக்காக இடையூறாக இருந்த பெற்ற மகனின் கை, கால்களில் சூடு வைத்து கைகளை உடைத்த சித்ரவதை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
Exit mobile version