Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உன் கர்ப்பத்திற்கு காரணம் என் புருசன் தான்! மாமியாரின் கேவலமான பேச்சு! கடைசியில் நேர்ந்த அவலம்!

ராஜஸ்தானில் தனது மருமகளோடு தனது கணவரை சேர்த்துவைத்து அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த மருமகள் மாமியாரை எரித்துக் கொலை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் தீபக் அவரது மனைவி நிகிதா. தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் அவரது தாய் ரேகா.

நிகிதா மற்றும் ரேகாக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ராம் நிவாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் உள்ளார்.

நேற்று முன் தினம் தீபக் வேலைக்கு சென்றுவிட்டார். ரேகா மற்றும் நிகிதா விற்கு இடையே சண்டை வந்துள்ளது.

ரேகா நிகிதாவை பார்த்து உன் வயிற்றில் வளரும் குழந்தை யாருடையது என்று எனக்கு தெரியும். என் கணவன் குழந்தை தான் உன் வயிற்றில் வளர்கிறது என்று மாமனாருடன் சேர்த்து மருமகள் நிகிதாவை தவறாக பேசியுள்ளார் ரேகா.

இருவருக்கும் சண்டை அதிகமான நிலையில் ஆத்திரமடைந்த நிகிதா மாமியார் ரேகாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். மேலும் உடலுக்குத் தீ வைத்துள்ளார்.

சண்டையிடும் சத்தத்தை கேட்டு அருகில் இருக்கும் அக்கம்பக்கத்தினர் தீபக்கிற்கு போன் செய்து தகவலை சொல்லி உள்ளனர்.

வீட்டிற்கு வந்த தீபக் வீட்டின் உள்ளே சென்று பார்க்கும் பொழுது ரேகா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். நிகிதா படுக்கை அறையில் உட்கார்ந்து இருந்ததை பார்த்து நடந்ததை  கேட்டுள்ளார் தீபக். ஆனால் நிகிதா நான் கொலை செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

போலீசுக்கு தகவல் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு, நிகிதாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Exit mobile version