பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை!

0
151
Mother's obsession with child! Daughter's stress! What a miserable situation that followed!

பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை!

தற்போது கொரோனா காலத்தினால் பள்ளிகள் திறக்காததால், குழந்தைகள் வீட்டில் உள்ளதால், அவர்களும் நம்மை போல் மன அழுத்தத்தில் தான் உள்ளனர். இதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இது மன உளைச்சல் என்று கூட தெரியாத நிலையில் தான் உள்ளனர். மேலும் நாம் என்னதான் ஆசைப்பட்டாலும் அவர்கள் விரும்பாமால் நாம் என்ன செய்ய முடியும்.

நமக்கு ஆசை தான் நம் பிள்ளைகள் வளர்ந்ததும் இப்படி ஆக வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று ஆனால், எத்தனை பேர் அவ்வாறு பெற்றோர் ஆசை பட்டபடி இருக்கிறோம். அப்படி ஒரு போராட்டத்தில் சொந்த மகளே தாயை கொன்று விட்டாள் என்றால் நம்ப முடிகிறதா? இல்லை என்றாலும் நடந்தேறி உள்ளது.

நவிமும்பை ஐரோலி செக்டார் 7 பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு 15 வயதில் மகளும், ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகளை டாக்டருக்கு படிக்க வைக்க தாயும், தந்தையும் ஆசைப்பட்டனர். அந்த குழந்தைக்கு 15 வயதே ஆகி உள்ளது. அவளை நீட் தேர்வுக்கு படிப்பதற்காக பயிற்சி மையத்திலும் சேர்த்து வைத்துள்ளனர்.

ஆனால் அந்த குழந்தைக்கு டாக்டருக்கு படிக்க சுத்தமாக விருப்பமில்லை என பெற்றோரிடம் பலமுறை தெரிவித்து வந்தால், இதை ஏற்காத பெற்றோர், தேர்வுக்காக பயிற்சி பெறும் படி சிறுமியை கட்டாயபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி அந்த சிறுமி செல்போனில் ஏதோ பார்த்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவளது தந்தை கண்டித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டாள்.

அதனை தொடர்ந்து அங்கு சென்ற தாய், மகளை வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் சிறுமி வீடு திரும்ப மறுத்ததோடு என்னை படிக்க கட்டாயப்படுத்துவதினால், தான் வெறுப்படைந்து இருப்பதாகவும், பெற்றோருக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தாயார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசாரிடம் நடந்த விவரத்தை எல்லாம் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக போலீசார் மகள் மற்றும் பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 30 ம் தேதி தாயின் கைபேசியில் இருந்து தந்தைக்கு தகவல் அனுப்பிவிட்டு, உடனடியாக செல்போனில் அழைத்து தாய் கதவை திறக்க மறுக்கிறார் என தகவல் கூறியுள்ளார். இதனால் பதட்டமடைந்த தந்தை உறவினர்களுக்கு போன் செய்து, தன் வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அப்போது வீட்டின் வெளிப்புறமாக பூட்டப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்த அவர்கள், தந்தைக்கு உடனே தகவல்  தகவல் தந்தனர்.

மேலும் வீட்டின் கதவை உடைத்து பார்க்கும்போது அந்தப் பெண் பிணமாக கிடந்ததை கண்டு தந்தை, உட்பட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த தாயின் கழுத்தில் கராத்தே பெல்ட் சுற்றியபடி இருந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பெண்ணின் தலையில் காயம் இருப்பதும், கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதனால் போலீசார் கொலையான பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 15 வயது சிறுமி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தனர். மேலும் நடந்த விவரத்தை கூறும் படியும் கூறியுள்ளனர். அப்போது சிறுமி எல்லாவற்றையும் சொல்லி விட்டாள். அப்போது அவள் சொன்ன தகவல்கள் போலீசாருக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது.

சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்தேன் அப்போது என் படிப்பு தொடர்பாக, நானும் என் தாயும் தகராறில் ஈடுபட்ட போது, என் தாய் கையில் இருந்த கத்தியை எடுத்து வந்து என்னை மிரட்டினார். என்னை அவர் தாக்க வருவதாக நினைத்து பயந்து விட்டேன். அதன் காரணமாக கீழே தள்ளிவிட்டு விட்டேன். அப்போது அங்கு இருந்த கட்டிலில் அவரது தலை மோதி படுகாயம் அடைந்தார். அரை மயக்கத்தில் கிடந்த தாயை என்னுடைய கராத்தே பெல்ட் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

பின் தாயின் கைபேசியில் இருந்து தந்தைக்கு வாட்ஸ்அப் மூலம் நான் விடை பெறுகிறேன் என்று தகவல் அனுப்பிவிட்டு, கதவை பூட்டிவிட்டு வெளியே சென்று தந்தைக்கு போன் செய்து தாய் கதவை திறக்க வில்லை என்று பொய் கூறினேன் என்று கூறியுள்ளார். இதை பார்க்கும்போது ஒரு க்ரைம் நாவலை படித்த மாதிரி இருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்தியதால், சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் இப்படி ஒரு விபரீத செயல் நடந்திருப்பதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.