Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மோதி துங்ரி விநாயகர் கோவில்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மோதி துங்ரி கோட்டை. இந்த மலைக்கோட்டையின் அடிப்பகுதியில் விநாயகருக்காக நிறுவப்பட்டது தான் மோதி துங்ரி கோவில்.

இந்த கோவிலில் இருக்கின்ற விநாயகர் சிலை உதைப்பூரிலிருந்து மதோசிங் என்ற மன்னருடன் இங்கு வந்த சேத் ஜெயராம் பாலிவால் என்பவரால் இங்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கோவில் பாலிவால் மேற்பார்வையில் தான் கட்டப்பட்டு இருக்கிறது. 1761 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவிலின் பணிகள் அனைத்தும் வெறும் 4 மாதங்களில் முடிந்திருக்கிறது என்பது வியப்புக்குரிய விஷயமாக இருக்கிறது. செந்தூர நிறத்தில் காட்சியளிக்கும் இந்த விநாயகரின் தும்பிக்கை வலது புறமாக வளைந்திருக்கிறது.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் கொடுப்பதை போன்று லட்டு தான் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. சிவலிங்கமும் இருக்கிறது. இந்த சிவபெருமான் மகா சிவராத்திரி காலத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருவார் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version