மோதிஜூர் லட்டு! தீபாவளி ஸ்வீட் ரெடி!
தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடை மற்றும் இனிப்பு வகைகள் தான். அந்த வகையில் இனிப்பு பண்டங்களை நம் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். தீபாவளி ஸ்பெஷல் ரெசிபியாக தற்போது மோதிஜூர் லட்டு எப்படி செய்வது என்பதை காணலாம்.
தேவையான பொருட்கள்:
முதலில் ஒரு கப் கடலை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கால் டீஸ்பூன் உப்பு, சிறிதளவு கலர் பவுடர் மூன்று பொருளுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு மாவு கட்டி விழாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். முதலில் அடுப்பில் ஒரு வானிலையில் என்னை காய வைக்க வேண்டும். கரைத்து வைத்துள்ள மாவை பூந்தி கரண்டியில் எண்ணெயில் தேய்க்க வேண்டும். எண்ணெயில் போட்டவுடன் அவை பொரிந்து விடும் அதனால் உடனடியாக அதனை வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்ட வேண்டும்.
அதன் பிறகு ஒரு வானிலையில் ஒரு கப் சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மேலும் இந்த தண்ணீரில் கலர் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். இந்தபாவு நன்கு கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு அந்தப் பாவில் நாம் பொரித்து வைத்துள்ள பூந்தியை சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு சர்க்கரைப் பாவில் இந்த பூந்தியை நன்கு கிளற வேண்டும். அதன் பிறகு சிறிதளவு முந்திரியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும் அதனை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு அதன் மேல் ஏலக்காய் தூள் தூவ வேண்டும். அதன் பிறகு 15 நிமிடம் அதனை ஆற வைக்க வேண்டும். பிறகு சிறு சிறு லட்டுகளாக பிடித்துக் கொள்ளலாம்.