Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மோஷன் பிரச்சனை? இந்த பானம் குடித்தால் 20 நிமிடத்தில் பெருங்குடல் மலக் கழிவுகள் முந்திக் கொண்டு வெளியேறும்!!

நாம் சாப்பிடும் உணவில் ஊட்டச்சத்துக்கள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.ஆனால் இக்காலத்தில் ஆரோக்கிய உணவு என்பது அரிதான ஒன்றாக உள்ளது.ஆரோக்கியத்தை விட ருசிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஆபத்தான நோய்கள் கூட எளிதில் நம்மை நெருங்கிவிடுகிறது.

சிலர் எடுத்துக் கொள்ளும் உணவில் நார்ச்சத்து என்ற ஒன்று இருப்பதே கிடையாது.இதனால் எந்த உணவு சாப்பிட்டாலும் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.தாமதமாக செரிமானம் ஆவதால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்புகளில் இருந்து மீள பெருங்குடலில் உள்ள மலக் கழிவுகளை முழுமையாக வெளியேற்ற வேண்டும்.

இன்று பெரும்பாலானோர் மலச்சிக்கல் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.இதில் இருந்து மீள இரண்டு பொருட்கள் கொண்ட பானம் தயாரித்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
2)பெரிய நெல்லிக்காய் – மூன்று அல்லது நான்கு
3)தேன் – ஒரு தேக்கரண்டி

தயாரிக்கும் முறை:-

செய்முறை விளக்கம் 01:

முதலில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

செய்முறை விளக்கம் 02:

பிறகு மூன்று அல்லது நான்கு பெரிய நெல்லிக்காயை விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை விளக்கம் 03:

இந்த பெரிய நெல்லிக்காய் துண்டுகளை கறிவேப்பிலை வைத்துள்ள மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

செய்முறை விளக்கம் 04:

அடுத்து ஒரு கிளாஸ் அளவிற்கு அதில் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு பில்டர் செய்து கொள்ளுங்கள்.

செய்முறை விளக்கம் 05:

பிறகு ஒரு தேக்கரண்டி அளவு தூயத் தேனை இந்த பானத்தில் ஊற்றி நன்றாக கலக்கி குடித்தால் அரை மணி நேரத்தில் பெருங்குடலில் தேங்கியுள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.

அதேபோல் நெல்லிக்காயை ஜூஸ் பதத்திற்கு அரைத்து எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் மலக் கழிவுகள் அனைத்தும் முழுமையாக வெளியேறிவிடும்.

Exit mobile version