மோட்டார் சைக்கிள் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து! விவசாயி பலி!

0
240

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து! விவசாயி பலி!

கோவை  மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (59). இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயமங்கலம் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று  கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

மேலும் எதிர்பாராத விதமாக அந்த கார் இவர் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. அந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தங்கமுத்துக்கு தலைவர் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் அங்கு தங்கமுத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த  தகவலின் பேரில் தங்கமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.