Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எச்சில் ஊற வைக்கும் நாட்டுக்கோழி குழம்பு!! இப்படி செய்து பாருங்கள்.. சுவை மறக்காது!!

#image_title

எச்சில் ஊற வைக்கும் நாட்டுக்கோழி குழம்பு!! இப்படி செய்து பாருங்கள்.. சுவை மறக்காது!!

அசைவ பிரியர்களுக்கு பிடித்த இறைச்சிகளில் ஒன்று கோழி.அதிலும் நாட்டு கோழி என்று சொன்னாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊரும்.இந்நிலையில் நாட்டு கோழி குழம்பு மிகவும் ருசியாக வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைபடி செய்தீர்கள் என்றால் வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டுமென்று கேட்டு வாங்கி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்:-

*நாட்டு கோழி – 3/4 கிலோ

*கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு

*இலவங்கம் – 4

*வர மிளகாய் – 4

*சோம்பு – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*பட்டை – 1 துண்டு

*கருவேப்பிலை – 2 கொத்து

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*கல் உப்பு – தேவைக்கேற்ப

*எண்ணெய் – தேவைக்கேற்ப

*தேங்காய் – 4 துண்டுகள்

*கடலை – 1/4 கப்

*சின்ன வெங்காயம் – 15

*பூண்டு – 15 பற்கள்

*இஞ்சி – சிறு துண்டு

*தக்காளி – 1

*கறி மசால் – 2 தேக்கரண்டி

*கொத்தமல்லி இலை – 1 கொத்து

செய்முறை:-

1.அடுப்பில் கடாய் வைத்து அதில் 1/4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, பட்டை, இலவங்கம்,வர மிளகாய்,சோம்பு,சீரகம்,கருவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு அவற்றை ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும்.

2.பிறகு அதே கடாயில் 1/4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயம்,பூண்டு,இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி எடுக்க வேண்டும்.

3.ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் முதலில் வறுத்து வைத்துள்ள கொத்தமல்லி,வரமிளகாய் உள்ளிட்ட கலவையை தண்ணீர் ஊற்றாமல் அரைக்க வேண்டும்.பிறகு அதில் கடலை,மஞ்சள் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

4.அந்த பவுடரை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ள வேண்டும்.பிறகு அதே மிக்ஸி ஜாரில் அடுத்து வதக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,பூண்டு,இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும்.

5.முதலில் அரைத்து வைத்துள்ள மசாலா பவுடர் மற்றும் அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய்,சின்ன வெங்காய கலவையை என இரண்டையும் ஒன்றாக கலக்கி வைத்து கொள்ள வேண்டும்.

6.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு சேர்க்க வேண்டும்.பிறகு கருவேப்பிலை,தக்காளி போட்டு வதக்க வேண்டும்.பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

7.அவற்றில் தேவையான அளவு கல் உப்பு,கறி மசால்,மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.பிறகு அதில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்க வேண்டும்.குழம்பு எவ்வளவு வேண்டுமோ அதற்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.கறி வெந்து வந்த பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்க வேண்டும்.

Exit mobile version