எச்சில் ஊற வைக்கும் “முட்டை சில்லி” – சுவையாக செய்வது எப்படி?
நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் முட்டைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இதில் அதிகளவு புரதம்,ஒமேகா 3,வைட்டமின் டி நிறைந்து இருக்கிறது.அதேபோல் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் செலுனியம் என்ற பொருள் முட்டையில் அதிகளவில் உள்ளது.
விலை மலிவு மற்றும் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுப் பொருளான முட்டையில் குழம்பு,கிரேவி,பொரியல் என்று பல உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் முட்டை சில்லி.இவற்றை சுலபமாக செய்து விடலாம்.அதிக வாசனை மற்றும் சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*முட்டை – 4
*மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
*காரமசால் – 1 தேக்கரண்டி
*இஞ்சி,பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி
*கார்ன் பிளார் – 3 தேக்கரண்டி
*மைதா – 3 தேக்கரண்டி
*எண்ணெய் – 1/4 லிட்டர்
செய்முறை:-
1.அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 3/4 வாசி அளவு தண்ணீர் ஊற்றவும்.அதில் 4 முட்டை மற்றும் கல் உப்பு சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் முட்டை வெந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.பிறகு முட்டை தோலை உரித்து முட்டையை 2 அல்லது 3 துண்டுகளாக கட் பண்ணவும்.
2.பின்னர் ஒரு பாத்திரத்திற்கு நறுக்கி வைத்துள்ள முட்டையை மாற்றி கொள்ள வேண்டும்.
3.அதில் கரமசால்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
4.அதனுடன் இஞ்சி,பூண்டு விழுதுகள்,கார்ன் பிளார்,மைதா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும்.கலருக்காக காஸ்மீரி சில்லி பவுடரை சேர்த்து கொள்ளலாம்.
5.அடுப்பில் கடாய் வைத்து அதில் ப்ரை பண்ண தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் தயார் செய்து வைத்துள்ள முட்டை துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
தேவைப்பட்டால் முட்டை சில்லியுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் அல்லது பொரித்த கருவேப்பிலை சேர்த்து சாப்பிடலாம்.சுவை அருமையாக இருக்கும்.