முன்னேற்பாடுகள் செய்யும் திரையரங்குகள்! தமிழக அரசிடம் வைக்கும் அடுத்த கோரிக்கை இதுதான்!
கடந்த மூன்று மாதங்களாக கரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டை அதிக அளவு பாதித்திருந்தது.மக்கள் மருத்துவ வசதிகளின்றி பெருமளவு பாதிக்கப்பட்டனர்.படிப்படியாக மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து கொரோணவின் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.அதில் முதல் கட்டமாக மக்கள் அனைவரையும் தடுப்பூசியை செலுத்து வைத்துள்ளது. அந்தவகையில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது குறைந்து காணப்படுவதால் மீண்டும் பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதல்வரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அந்தக் கோரிக்கையை ஏற்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு முதல்வர் அனுமதி அளித்தார்.
தற்பொழுது இரண்டாவது அலையின் காரணங்களால் திரையரங்குகள் மூன்று மாத காலமாக மூடப்பட்டிருந்தது.இந்த மூன்று மாத காலங்களாக மக்கள் யாரும் வராததால் ,கிருமி நாசினி அடிக்காமலும் தூய்மை இன்றியும் திரையரங்குகள் இருந்தது.முதல்வர் நாளை முதல் திரையரங்குகள் இயங்கலாம் என்று கூறியதில், திரையரங்கு உரிமையாளர்கள் அவர்கள் திரையரங்குகளில் மக்கள் வந்து படம் பார்ப்பதற்கான அதிக முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.அதில் குறிப்பாக மக்களின் பாதுகாப்பை கருதி மக்கள் அமரும் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.அதேபோல திரையரங்குக்கு வருபவர்கள் யாரேனும் முகக் கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு முக கவசம் வழங்குவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி படம் பார்க்க வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா என்ற சான்றிதழ்களை பார்ப்பது போன்றவற்றிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.அரசாங்கம் கூறிய அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கூறுவது, இந்தக் கரோனா தொற்றினால் திரையரங்கு திறக்கப்படாமல் இருந்ததால் அதிக அளவில் நஷ்டம் அடைந்துள்ளோம்.அதனால் தற்போது தமிழக அரசு புதிதாக விதித்துள்ள வரி மற்றும் கேளிக்கை வரி உள்ளிட்டவைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்று விளக்கு வலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.