Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கு தடை!! வருத்தத்தில் திரையரங்க உரிமையாளர்கள்!!

Movies banned next month !! Theater owners in grief !!

Movies banned next month !! Theater owners in grief !!

அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கு தடை!! வருத்தத்தில் திரையரங்க உரிமையாளர்கள்!!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  கொரானா நோய்தொற்று காரணமாக கண்டந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியை கண்டனர். பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்படுத்தி 50 சதவீத இருக்களுடன் திரையாங்குகளை இயக்கலாம் என் மதிய அரசு ஆணையிட்டது. இதைதொடந்து பெரியளவில் கூட்டம் ஏதும் இல்லாததால் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட்டனர்.

அந்த படங்கள் சில லட்சம் கூட வசூலிக்கததால் ஓரிரு வாரங்களிலேயே திரையரங்குககளில் இருந்து அந்த படங்களை நீக்கம் செய்து விட்டனர். இந்நிலையில்  இந்த ஆண்டு பொங்கலன்று விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆன மாஸ்டர்  திரைபடம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் பெருமளவில் லாபத்தை எட்டியது.

பிறகு கர்ணன், சுல்தான் ஆகிப்படங்களும் நல்ல வசூலைக் கொடுத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரசின் 2 ஆம் அலை வேகமாக பரவத் தொடங்கி உள்ளதால். மத்திய அரசு மீண்டும் சில கடுமையான கட்டுபாடுகளை விதித்துள்ளது.

அதில் திரையங்குளில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற கட்டுபாடுகளும் அடங்கும். இதனால் அடுத்த மாதம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர், சசிக்குமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன், விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார், லாபம் ஆகிய படங்கள் வெளியிட உள்ளனர்.

இந்த வகையில் அடுத்த மாதமும் இந்த 50 சதவீதக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் இந்த படங்களின் வெட்யீடு தள்ளிவைக்கப்படும் என தகவள் வந்துள்ளது.

Exit mobile version