Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உதயநிதியை தொடர்ந்து சபரீசனை அரசியலுக்கு இழுக்கும் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின் மகள் செந்தாமரை கணவர்தான் சபரீசன் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கு முன்னரே திமுக சார்பாக ஆரம்பிக்கப்பட்ட நமக்கு நாமே நடைபயணம் முதல் இந்த வருடம் நடந்த சட்டசபை தேர்தலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் போன்ற அனைத்து திட்டங்களிலும் சபரீசன் பங்கும் இருப்பதாக சொல்கிறார்கள்.

அதோடு திமுகவிற்கு பல யூகங்கள் வகுத்துக் கொடுத்தவர் சபரீசன் என்றும் சொல்லப்படுகிறது. சென்ற 2019 ஆம் வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை சபரீசன் தயாரித்து கொடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியானது. டெல்லி கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்கும் சமயத்தில் சபரீசனை ஸ்டாலின் அழைத்துச் செல்வது வழக்கமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஸ்டாலினுக்கு தொழில்நுட்ப உத்திகளை சொல்லிக்கொடுத்து திமுகவிற்கு ஐடி விங்கை உருவாக்கியதுஅவர்தான் என்று சொல்லப்படுகிறது. அதனை நிர்வகித்து வந்தது என்று பல வேலைகளை அவர் செய்திருக்கிறார். பிரசாந்த் கிஷோரை அதிமுகவிற்கு பணியாற்ற செய்தவரும் இவர்தான் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்சமயம் தமிழ்நாட்டில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடம் காலியாக இருக்கிறது. திமுக சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதற்கு முக்கிய நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து இருக்கின்ற சூழலில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய மருமகனான சபரீசன் செய்த உதவிக்கு கைமாறு செய்யும் விதத்தில் அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, திமுகவைச் சார்ந்த பல மூத்த தலைவர்களும், முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர் ஸ்டாலின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version