Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட காங்கிரசை சார்ந்த முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றையதினம் ஆரம்பமானது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று தொடங்கியது. மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

கன்னியாகுமரியின் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட நான்கு நபர்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி அடைந்தவர் வசந்தகுமார் அதன் பின்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக, மரணமடைந்தார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் இடைத் தேர்தல் நடத்தப்பட்டு அந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மறைந்த வசந்தகுமாரின் மூத்த மகன் விஜய் வசந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் வெற்றியும் அடைந்தார்.

இவ்வாறான சூழலில் விஜய் வசந்த் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் தமிழில் பதவி ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, ராஜீவ்காந்தி புகழ் வாழ்க, என்று தெரிவித்தார் இதற்கிடையில் மக்களவை பிற்பகல் 12. 24 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மறைந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அவை மறுபடியும் ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version