திரு.மாணிக்கம்  என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு!! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம்!!

Photo of author

By Vinoth

திரு.மாணிக்கம்  படத்தை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கி சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கின்றார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாரட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஒரு நல்ல படத்துக்கு அடையாளம் படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் ஒரு மூன்று நான்கு நாட்களுக்காவது நினைவில் வந்துகொண்டே இருக்கணும் அந்த படத்தில் வரும் எதாவது ஓர் நல்ல விஷயம், நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகணும். அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தைவைத்து திரைக்கதை, வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி அவர்கள் தான் ஓர் அற்புதமான இயக்குநர் என்பதை நிருபித்திருக்கிறார்.

திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. இந்த திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றியிருக்கும் மைனா சுகுகுமார், விஷால் சந்திரசேகர், குணா ரகு அவர்களுக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் இந்த படத்தை தயாரித்திருக்கும் ஜி.பி.ரவி குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version