Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேம்பி அழுத MSV! எதற்கு தெரியுமா? இப்பாடலின் பொருள் உணர்ந்தால் நீங்களும் அழுவீர்கள்!

#image_title

கேரளத்தில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டு இசையமைப்பாளர்களில் அன்றைய காலகட்டத்தில் இவர் இல்லை என்றால் இன்றளவும் நாம் இனிமையான பாடல்களை கேட்டிருக்க முடியாது. அந்த அளவிற்கு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த பாடல்கள் ஏராளம்.

 

அப்படி ஒரு நாள் கதைக்கு ஏற்ற பாடல் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தார் MSV. அப்பொழுது எம்எஸ்விக்கு கிடைத்த பாடலை பார்த்து அதன் பொருளை பார்த்து தேம்பி அழுத காரணம் என்ன தெரியுமா?

 

மாடர்ன் தியேட்டர் தயாரிப்பில் ‘பாசவலை’ என்ற படம் உருவாகிறது. அதில் ஒரு ராஜா தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் நாட்டையும் இழந்து வறுமையில் வாடும் ஒரு காட்சிக்கு பாடல் எழுத வேண்டும்.

 

மருதகாசியும், கண்ணதாசனும் பாடல்கள் எழுதினார்கள். ஆனால் அது என்னவோ எம்எஸ்வி க்கு அந்த காட்சிக்கு ஏற்றவாறு அந்த வரிகள் இல்லை என கருதியுள்ளார்

 

அப்பொழுது மிகவும் வருத்தத்திலிருந்து எம்எஸ்வி இடம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகி ஒருவர் ஒரு இளைஞரை இவர் நன்றாக பாடல் எழுதுவார் என்று அறிமுகப்படுத்துகிறார். ஆனால் எம்.எஸ்.வி பெரிய பெரிய கவிஞர்களே இதற்கு பாடல் எழுத முடியாத பொழுது, எப்படி புதிதாக ஒருவர் எழுதுவார் என்று அவரைப் பார்க்க மறுத்திருக்கிறார்.

 

அப்படி தினமும் நான்கு நாட்கள் தொடர்ந்து எம் எஸ் வி- யை பார்க்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த பொழுது, எம் எஸ் வி சரி யாராலும் எழுத முடியவில்லை. இவர் என்ன செய்கிறார்? என்று பார்ப்போம் என்று, நம்பி இந்த பாடலுக்கு ஏற்ற சூழ்நிலையை அவர் கூறுகிறார்.

 

அடுத்த நிமிடம் பாடல் ஒன்று தயாராகிறது. அதை பார்த்து கண்கள் சிவந்து போய் கண்ணீர் வெளிவந்ததாம்.

 

உடனே அவரைக் கட்டி அணைத்து பாராட்டி நீ ஒரு நல்ல கவிஞனாக வருவாய் என்று பாராட்டினாராம் எம் எஸ் வி.

 

அதன் பின் தனது பூஜை அறையில் ஒரு நாள் இப்படி ஒரு பாடலை பார்க்காமல் அவரை காக்க வைத்து விட்டோமே என்று மிகவும் வருத்தப்பட்டு தேம்பி அழுதாரம் எம் எஸ் வி.

 

அப்படி எழுதியவர் யாருமில்லை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். அவர் 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். வெறும் பத்து வருடங்கள் நிலைத்த கலை பயணத்தில் எத்தனையோ பாடல்களை அவர் எழுதியுள்ளார். அத்தனை பாடலும் மனதையும் மயக்கும் வண்ணம் இருக்கும்.

 

உயிரோடு இருந்து பாடல் எழுதி இருந்தால் கண்டிப்பாக கண்ணதாசன் என்ன? வாலி என்ன? அனைவரையும் தூக்கி சாப்பிட்டு இருப்பார் என்று சொல்லுவார்களாம்.

 

அப்படி அவர் எழுதிய பாடல்

” குட்டிஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்!

குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!

தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!

சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்

உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்

உலகத்துக் கெதுதான் சொந்தமடா!

Exit mobile version