சென்னை மாநகரப் பேருந்துகள் நேரத்தை அறிய ‘சலோ’ செயலி

0
111

சென்னை மாநகரப் பேருந்துகள் நேரத்தை அறிய ‘சலோ’ செயலி

சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் போக்குவரத்து முறையாக பேருந்து போக்குவரத்தே உள்ளது.


பல இலட்சக்கணக்கான மக்கள் தினம் தினம் சென்னை மாநகரப் போக்குவரத்தை பயன்படுத்தி தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

ஆனால் சென்னை மாநகராட்சியில் பெருகி உள்ள மக்கள் தொகையால் மாநகரப் பேருந்துகள் சரியான நேரத்தில் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே உள்ளது.

மேலும் வெளி ஊர்களில் இருந்து வரும் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கான பேருந்தை அடையாளம் காண மிகுந்த சிரமப்படுகின்றனர். வெளியூர் மக்களுக்கு பேருந்தின் வழித்தடத்தை அறிந்து கொள்ளவும் ‘சலோ’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தற்போது உள்ள சென்னை மாநகராட்சி பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் அதனை சலோ செயலியுடன் இணைக்கும் பட்சத்தில் பேருந்து எங்கே வந்து கொண்டு இருக்கிறது என்பதையும் பயணிகள் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இந்த செயலியை பிளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாகராட்சி பேருந்துகள் எந்தெந்த வழித்தடத்தில் எந்தெந்த இடைவெளியில் இயக்கப்படுகின்றது என்பது பற்றிய தகவலையும் சலோ செயலி கொண்டுள்ளது. சென்னையில் சுமார் 700 வழித்தடங்களில் 3000 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றது.