தொடர் விடுமுறை காரணமாக பலமடங்கு உயர்ந்த விமான கட்டணம்!!

0
77
Multiplied air fares due to frequent vacations

சென்னை: விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை வர உள்ளதால் விமானங்களில் முன்பதிவு அதிகரிக்கும். சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற உள்நாட்டு விமானங்கள் மற்றும் சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய சர்வதேச விமானங்களில் டிக்கட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து உள்ளன.

சென்னை மதுரையிடையே வழக்கமாக 4,300 ரூபாயாக இருந்த கட்டணம்  தற்போது 17,795 ரூபாய்  அதிகரித்துள்ளது. சென்னை – திருச்சிக்கான கட்டணம் 14,387 ரூபாயாகவும், சென்னை – கோவை கட்டணம்  9,418 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. சென்னை – கொச்சின் இடையில் விமான கட்டணம் வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை தாய்லாந்து இடையே வழக்கமாக 8,891 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது கட்டணம் 17,437 ரூபாய் உயர்ந்துள்ளது.

கட்டணம் அதிகரித்தாலும் பல விமானங்களில் டிக்கட்டுகள் முழுமையாக முன்பதிவு ஆகி உள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.