மும்பை இந்தியன்ஸ் அணி இப்படித்தான்! குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

0
251
#image_title

மும்பை இந்தியன்ஸ் அணி இப்படித்தான். குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் தன்னுடைய முன்னாள் அணி மும்பை இந்தியன்ஸ் பற்றியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றியும் பேசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா அவர்களின் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தற்போது விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சில ஆண்டுகள் விளையாடியுள்ளார். இவர் தற்போது மீம்பை இந்தியன்ஸ் அணி பற்றியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றியும் பேசியுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள், “கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. நன்றாக விளையாடும் மிகச் சிறந்த வீரர்களை அணியில் எடுத்து வெற்றி பெறுவது முதல் வழி. அதுதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் வழி. வீரர்கள் யாராக இருந்தாலும் மோசமாக விளையாடுபவர்களாக இருந்தாலும் அவர்களை அணியில் எடுத்து அவர்களுக்கு சிறந்த பயிற்சி கொடுத்து வெற்றிக்கான சூழலை உருவாக்கி அந்த வீரர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடச் செய்து வெற்றி பெறுவது இரண்டாவது வழி. இதைதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்கின்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த அணுகு முறை என்னுடைய அணியை வழி நடத்த உந்துகோலாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா தலைமையில் சென்ற வருடம் கோப்பையை கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய மொத்தம் 10 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.