மொச்சை கொட்டை பாகற்காய் புளிக்குழம்பு! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்!

0
239

மொச்சை கொட்டை பாகற்காய் புளிக்குழம்பு! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்!

குழந்தைகள் எப்பொழுதும் பாகற்காயை விரும்ப மாட்டார்கள். அவ்வாறு பாகற்காயை வெறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு பாகற்காய் மற்றும் மொச்சகொட்டை சேர்த்து புளி குழம்பு வைத்தாள் அனைவரும் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருள்:நீளமான பாவற்காய் இரண்டு எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை வட்டமாக வெட்டி கொள்ள வேண்டும். வேகவைத்த மொச்சை கொட்டை ஒரு கப், நறுக்கிய சின்ன வெங்காயம் முக்கால் கப், தக்காளி பழம் ஒன்று, உரித்த பூண்டு ஏழு பல். மேலும் மசாலாவுக்கு சுவையான பொருட்கள்: வரமிளகாய் காரத்திற்கு ஏற்ப, வர மல்லி நாலு டேபிள் ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன் சோம்பு ஒரு ஸ்பூன், தேங்காய் துருவல் முக்கால் கப், மிளகு ஒரு ஸ்பூன் இவை அனைத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஆறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

மொச்சகொட்டை பாகற்காய் புளிக்குழம்பு செய்முறை:

முதலில் வாணிலியில் விளக்கெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் விட்டு காய்ந்த பிறகு கடுகு ,வெந்தயம் , சீரகம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும். பிறகு வெங்காயம், தக்காளி, பூண்டு போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு சிறிதளவு மஞ்சள் தூள்,பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதக்கியவுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் பிறகு சிறிதளவு நீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பச்சை வாசனை போகும் வரை கொதி விட்டு இறக்கி வேண்டும். பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சிறிதளவு மிளகுத்தூள் சேர்க்க வேண்டும். மேலும் சூடான குழம்பில் தேங்காய் துண்டுகளை சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம் இதனை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். சுவையான மொச்சைக்கொட்டை பாகற்காய் புளிக்குழம்பு தயார் ஆகிவிட்டது.