Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதலிக்க மறுத்ததால் மறைத்து வைத்த கத்தியால் கொலையா?.பெங்களூரில் நடந்த கொடூரம்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் காதலிக்க மறுத்ததால், அவரை கொன்றுவிட்டு, தமிழக வாலிபர் ஒருவர் தானும் விஷம் அருந்தி கொண்டு தற்கொலை செய்துள்ள நிகழ்வு அப்பகுதியில் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்துக்கு உட்பட்ட அங்கோலா கிராமத்தை சேர்ந்தவர் உஷா. இவர் வயது 25 ஆகிறது. இவர் பெங்களூர் நகரை சேர்ந்த மாவட்ட எல்லையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மேலும், அந்த பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி, நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வருக்கிறார். உஷாவுடன் பணிபுரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 30) என்பவர் உஷாவை ஒன்சைடாக காதலித்து வந்துள்ளார்.

ஒருவழியாக உஷாவிடம் கோபாலகிருஷ்ணன் தனது காதலை தெரிவித்துள்ளார். அப்போது உஷா கோபாலகிருஷ்ணனை காதலை நிராகரித்து விட்டுள்ளார். மேலும், தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், இதன் காரணமாக என்னை இனி தொந்தரவு செய்யக்கூடாது என்றும் கோபாலகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை மல்லசந்திரம் கிராமம் அருகே உஷாவை கோபாலகிருஷ்ணன் வழிமறித்து தன்னை காதலிக்கும்படி மிரட்டியுள்ளார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உஷா., அங்கிருந்து உடனே புறப்பட முயன்றார்.

இதனால் பெரும் கோபமடைந்த கோபாலகிருஷ்ணன் உஷாவை, அவர் பின்னால் மறைத்து வைத்திருந்த கத்தியை சரமாரியாக குத்திக் கொலை செய்தார். உடனே உஷா உடல் எங்கும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே யாராலும் காப்பாற்ற முடியாமல் உயிரிழந்தார்.

இதனையடுத்து கோபாலகிருஷ்ணன் தனது மோட்டார் வாகனத்தில் இருந்து தப்பித்து, யாரும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version