Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாலிபர் கொலை வழக்கில் மறைந்திருந்த குற்றவாளிகளை சுற்றி போலீசார் வளைத்து கைது 

thanjavur

thanjavur

வாலிபர் கொலை வழக்கில் மறைந்திருந்த குற்றவாளிகளை சுற்றி போலீசார் வளைத்து கைது

தஞ்சை மாவட்டம் பள்ளி அக்காரம் வாலிபர் கொலை வழக்கில் மறைந்திருந்த குற்றவாளிகளை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மணக்கரம்பை பைபாஸ் அருகே உள்ள அரசு மதுபான கடை முன்பு கடந்த 18-ம் தேதி பள்ளியக்ரஹாரம் சின்னத்தெருவை சேர்ந்த பட்டதாரி வாலிபர் பிரேம்(31) என்பவரை வெட்டி கொலை கொலை செய்தனர்.

இந்த வழக்கில் இறந்துபோன பிரேம் அண்ணன் முத்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சப்இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் விசாரணை செய்து வந்தனர். இந்த பிரேம் கொலை வழக்கில் பள்ளியக்ரஹாரம் காந்தி நகரை சேர்ந்த மணிகண்டன்(33), பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த விஷ்வபிரசாத்(23) புல்லாண்டு (என்ற) பிரகாஷ்(34), பள்ளியக்ரஹாரம் பெரியத்தெருவை சேர்ந்த சூர்யா (25) ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

இந்த நிலையில் திருவையாறு அடுத்த தென்பெரம்பூர் வெண்ணாற்றங்கரையில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான விஷ்வபிரசாத்(23), சூர்யா(25) ஆகிய இருவரும் பதுங்கி இருப்பதாக நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

இந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த விஷ்வபிரசாத், சூர்யா ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர்.

Exit mobile version