தங்கத்திற்காக கொலை!கூட்டாளிகள் அதிரடி கைது!
திருச்சியில் புத்தூர் மதுரை வீரன் சுவாமி கோவில் தெருவை சேர்த்தவர் மார்டீன் ஜெயராஜ் (42) வயதான இவர் கரூர் பைபாஸ் ரோட்டில் ஒரு பிரபலமான நகை கடையில் ஆறு வருடங்களாக கொள்முதல் பிரிவில் வேலை செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடையில் நகைகள் வாங்க வாடகை காரின் மூலம் சென்றார்.சென்னையில் அந்த நகைக்கடையில் மார்டீன் ஜெயராஜ் 1 கிலோ 598 கிராம் நகைகளை வாங்கி விட்டு மீண்டும் திருச்சி சென்றார் என கூறப்படுகிறது.அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது தொலைபேசி சுவிட்சுடு ஆப் ஆகி உள்ளது, அவரும் திருச்சி வராததால் அவர் வேலை செய்யும் கடை உரிமையாளர் மதன் சந்தேகத்தின் பேரில் போலீசில் புகார் செய்தார்.
உரையூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கும் போது 1½ கிலோ தங்கத்துடன் தனது ஊழியரை காணவில்லை என கூறியுள்ளார்.அதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளும் போது அந்த வாடகை காரை ஓட்டியவர் திருச்சியில் மாம்பலச்சாலையில் தாத்தாச்சாரியார் கார்டனை சேர்ந்த சண்முகம் மகன் பிரசாந்த் (26) வயதுடைய ப்ரஷாந்த் என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
சென்னையிலிருந்து திருச்சி வரும் வழியில் நகைக்காக ஆசைப்பட்டு தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து கடலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியில் வைத்து மார்டீன் ஜெயராஜை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு நகையை எடுத்து கொண்டு அவரது உடலை திருச்சி மாவட்டம் அழகியமணவாளம் கிராமத்து காட்டு பகுதியில் புதைத்து வைத்துள்ளதாகவும் கூறி போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.
மேலும் அவர் கொள்ளையடித்த நகையை திருவெறும்பூர் பகுதியில் ஒரு பெண்ணிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் கூறினார்.இதனால் பிரஷாந்த் உட்பட 7 கொலையாளிகளை போலீசார் கைது செய்து மார்டீன் ஜெயராஜை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார்கள்.அதை தொடர்ந்து இன்று மார்டீன் ஜெயராஜின் உடலை தோண்டி எடுக்க உள்ளனர்.