Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொலை சம்பவம்! தாத்தாவை அடித்து மூட்டையில் கட்டிய பேரன்!

Murder incident in Tuticorin district! The grandson who beat his grandfather and tied him in a bundle!

Murder incident in Tuticorin district! The grandson who beat his grandfather and tied him in a bundle!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொலை சம்பவம்! தாத்தாவை அடித்து மூட்டையில் கட்டிய பேரன்!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்தது அந்த தகவலில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை வ உ சி நகர் சிவன் கோவில் பகுதியில் உள்ள மொட்டை  கிணறு அருகே சந்தேககும்படியாக ஆள் நடமாட்டம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து வந்தனர் மேலும் அந்த பகுதியில் ஒரு ஆட்டோவானது லோடு ஏற்றிய நிலையில் நின்று கொண்டிருந்தது மேலும் அதற்கு அருகில் உள்ள கிணற்றின் அருகே சாக்கு முட்டையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். மேலும் போலீசார் அந்த கிணற்றிற்கு அருகில் செல்வதற்கு முன்னே அங்கிருந்தவர் தப்பி ஓடினார் அதனைக் கண்டு போலீசார் அந்த மூட்டையை கைப்பற்றி சோதனை நடத்தினார்கள்.

மேலும் அந்த மூட்டையில் ஒரு முதியவர் அடித்து கொலை செய்து மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. போலீசார் அதிர்ச்சி அடைந்து அந்த உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்ந்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்து  அந்த சாக்கு முட்டையில் இருந்த முதியவர் சாயர்புரத்தை சேர்ந்த தாமஸ் மகன் சின்சன் (75). என்பது தெரிய வந்தது.

மேலும் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த  சிம்சனின்  மூத்த மருமகனாகிய ஜெயராமின் மகன் முருகன் என்பவருக்கும் சிம்சனுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள். மேலும் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகன் சிம்சனை அடித்து கொலை செய்ததாகவும் தனது லோடு ஆட்டோவில் வைத்து உடலை கிணற்றில் வீசுவதற்காக கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திரைப்பட போலீசார் முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

Exit mobile version