Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முருகனுக்கு இந்த நாளில் விரதம் இருந்தால் சகல நன்மையும் கிடைக்கும்!

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டால் மிகவும் விசேஷமான நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெற இயலும்.

கார்த்திகை, விசாகம் இந்த இரண்டு நட்சத்திரங்களும் செவ்வாய்க்கிழமையில் ஒன்றிணைந்து வந்தால் அது இன்னும் சிறப்பு. ஆடி கிருத்திகையில் முருகனை வழிபடுவது மிக, மிக விசேஷம் என்று சொல்லப்படுகிறது.

முருகனை நாள்தோறும் நம்முடைய வீட்டில் வழிபட வேண்டும் என்றால் அந்த முருகப்பெருமானின் படம் வள்ளி, தெய்வானையுடன் நம்முடைய வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும் அந்த சுவாமி படத்திற்கு முன்பு ஓம் சரவணபவ என்று எழுத்தினை அரிசிமாவால் எழுதி கோலமிட வேண்டும்.

முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு ஆனால் தினசரி ஆறு விளக்குகள் ஏற்றுவது சாத்தியமில்லை ஆகவே ஒரு விளக்கினை ஏற்றி வைத்து நெய் வைத்தியமாக பழங்கள், கற்கண்டு, உலர் திராட்சை இவைகளில் ஏதாவது ஒன்று படைத்து முருகனை பூக்களால் அலங்கரித்து தீப, தூப கற்பூர ஆரத்தியில் முருகனை பூஜை செய்யலாம்.

முருகப்பெருமானுக்கு ஏற்ற ஆறுகளான முல்லை சாமந்தி ரோஜா போன்ற பூக்களை சமர்ப்பிப்பது இன்னும் சிறப்பு. சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களை உடையவன் முருகன். சரவணபவ என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று அர்த்தம் ஆகும்.

ச என்றால் மங்களம் ர என்றால் ஒலி கொடை வ என்றால் ன என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்று பொருளில் மங்களம், ஒளி, கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்களுடன் தோன்றியவன் என்றும் தெரிவிப்பார்கள்.

இந்த பூஜைகள் ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை மூன்று முறை முதலில் உச்சரிக்க வேண்டும் அதன் பிறகு ஆர்வமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்ற சோதி பிழம்புதூர் மேனியாகி கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டுங்கொண்டு ஒரு திரு முருகன் வந்து அங்கு உதித்தனன் உலக மைய ஏறுமயில் லேறி விளையாடு மிக நன்றே ஈசனுடன் ஞானமொழி பேசும் முகமின்றே கூறுமடி யார் கல்வினை தீர்க்க முகமின்றி குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே வன்னியை மனமுணர வந்த முகமொன்றே ஆறுமுகமான பொருள் நீ யருளல் வேண்டும் ஆதியருணாசல மமர்ந்த பெருமாளே

இந்த இரண்டு முருக பெருமானின் பாடல்களையும் பாட வேண்டும் உங்களால் முடிந்தால் கந்த சஷ்டி கவசத்தை வாரம் ஒரு முறை செவ்வாய்க்கிழமைகளில் படிப்பது நல்லது படிக்க முடியாத பட்சத்தில் தங்களுடைய வீட்டில் ஒலிக்கச் செய்து காலால் கேட்பதும் நல்ல பலன் தரும்.

செவ்வாய் தோஷம் இருப்பவர்களும் திருமண தடை உள்ளவர்களும் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில், மாதம் தோறும் வரும் சஷ்டியிலும் முருகனை நினைத்து விரதம் இருந்தால் இந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம். அழகன் முருகனை நினைத்து நாம் மனதார வழிபடும் ஒவ்வொரு வழிபாடும் நமக்கு பலனை அள்ளித் தரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

Exit mobile version