Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

9 செவ்வாய்க்கிழமை விரதமும்! கிடைக்கும் பலன்களும்!

ஜாதகத்தில் செவ்வாயின் பலத்தை பொருத்தே நீதிபதிகள், தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு இருக்கும்.

செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் வம்பு, சண்டைக்கு போக மாட்டார்கள். வந்த சண்டையையும் விட மாட்டார்கள். செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்களுக்கு மறு பிறவி இல்லை என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

ரத்தத்திற்கு செவ்வாயே காரகம் வகிக்கிறார். ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. செவ்வாயை வழிபட்டால் ரத்த அழுத்தம், உஷ்ணம் கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

செவ்வாய்க்கிழமைக்கு என்று ஒரு வேகம் இருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று பரிகாரம் செய்தால் அதற்கு பலன் கிடைக்கும்.அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் 9 வாரத்தில் தங்களுக்கு நல்லது நடைபெறும்.

வியாபாரம் செய்பவர்கள் நிச்சயமாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தியாக்கலாம். செவ்வாய் தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் அனைத்து வியாபாரம் தொடர்பான முயற்சிகளிலும் வெற்றியை வழங்கும்.

செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் நீராடி முடித்து அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டிற்கு திரும்பியவுடன் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

Exit mobile version