இசை திருட்டு – தேவாவின் வேதனை: ‘என்னுடைய பாடலை எனக்கே திருப்பி காட்டினார்கள்!’”

0
99
Music theft - Deva's agony: 'My song was returned to me!'"

தமிழ் சினிமாவின் தேனிசை தென்றல் தேவா, 1990களில் அவரது இசையால் ரசிகர்களை சிலிர்க்க வைத்தவர். அப்போதெல்லாம் தேவாவின் பாடல்களே பட்டி தொட்டி எங்கும் கேட்கப்பட்டது. “அண்ணாமலை,” “பாட்ஷா,” “ஆசை,” “அவ்வை சண்முகி” போன்ற வெற்றி படங்களுக்கு தேவா வழங்கிய இசை தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது. ஆனால், தற்போதைய சூழலில் இவருக்கு நேர்ந்த வேதனையான அனுபவம் ஒன்று அவர் மனதை மிகுந்த காயப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தேவா தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய போது, அவரது குரலில் ஆழ்ந்த வேதனை புலப்பட்டது. “நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய பாடல்களை, என்னுடைய பாடல்களாகவே ஏற்றுக்கொள்ளாமல், வேறு ஒருவருடைய பாடல் என்று சொல்வது என் மனசுக்கு மிகுந்த வேதனை,” என்றார்.

தேவா கூறியதாவது: “ஒரு இசை நிகழ்ச்சிக்காக பாட்டு லிஸ்ட் அனுப்பினேன். அப்புறம், ஒரு கால் வந்தது. அப்போ அவர் என்னை கேட்டார், ‘தேவா சார், உங்க பாட்டு மட்டும் போதும். அப்புறம் ஏன் வெளிநாட்டு இசையமைப்பாளர் பாடல்களை சேர்த்தீங்க?’ அதற்கு நான், ‘அதெல்லாம் என் பாட்டுதான் சார்’ என்றேன். ஆனால் அவர், ‘அதெல்லாம் உங்க பாட்டு இல்லை!’ என்று வாதாடினார். இந்த பாட்டு உருவாக என்னால் செய்த உழைப்பு அனைத்தும் வீணானது என்று நான் அந்த தரும் நினைத்தேன் என்றார்.

தேவா இதன் மூலம் தனது வேதனையை மட்டும் அல்ல தமிழ் சினிமாவில் உண்மையை முறையாக அங்கீகரிக்காத நிலையைப்பற்றியும் எடுத்துக்காட்டியுள்ளார். “இசையமைப்பாளர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பு கிடைக்க வேண்டும்,” என்று அவர் விடுத்த கோரிக்கை ரசிகர்களை சிந்திக்காவைதது.