Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்..!

#image_title

இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்..!

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்டி படைத்தது வரும் இளையராஜா அவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்.

மகள் பவதாரிணி(47).. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் பல புகழ்பெற்ற பாடல்களை பாடி சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்தார்.

தமிழில் தனது தந்தை இசையில் “மஸ்தானா.. மஸ்தானா..” என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான இவர்… தனது அழகான குரல் வளத்தால் மென்மேலும் உயர்ந்தார். அதுமட்டும் இன்றி பவதாரிணி சில படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை தனக்கு உரித்தாகிய இவர் இன்று மாலை காலமானார்.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பவதாரிணி ஆயுர்வேத சிகிச்சை பெற இலங்கைக்கு சென்ற நிலையில் கடந்த 5 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனால் இன்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமாகி இருக்கிறார். அவரது உடல் நாளை மாலைக்குள் சென்னைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றது.

பாடகி பவதாரிணியின் இறப்பு திரையுலகினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version