Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சருமத்திற்கு பயன்படும் கஸ்தூரி மஞ்சள்!!! இது வயிற்று வலியை குணப்படுத்துமா!!?

#image_title

சருமத்திற்கு பயன்படும் கஸ்தூரி மஞ்சள்!!! இது வயிற்று வலியை குணப்படுத்துமா!!?

நாம் முகத்திற்கு பூசி வரும் கஸ்தூரி மஞ்சளில் பல நன்மைகள் இருக்கின்றது. இது நம் சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மட்டுமே சரிசெய்யும் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் இது பலவிதமான பிரச்சனைகளையும் சரிசெய்து விடும்.

கஸ்தூரி மஞ்சலில் சருமத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இதை தொடர்த்து முகத்தில் பூசி வந்தால் முகத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சருமத்திற்கும் வயிற்று வலிக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.

வயிற்று வலிக்கு கஸ்தூரி மஞ்சள்!!!

நாம் வயிற்று வலியை சரி செய்வதற்கு கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம். நமக்கு தீராத வயிற்று வலி இருந்தால் கஸ்தூரி மஞ்சளை தேனில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் வயிற்று வலி குணமாகும்.

சருமத்திற்கு கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவது எப்படி???

கஸ்தூரி மஞ்சளை சாதாரணமாக பூசி வந்தால் தில் நோய்கள் அனைத்தும் சரியாகி விடும். கஸ்தூரி மஞ்சளை நாம் முகத்தில் தொடர்ந்து பூசி வரும்பொழுது முகப்பருக்கள் அனைத்தும் மறைந்து விடும். முகம் பொலிவை பெரும். தேமல் போன்ற பிரச்சனைகள் மறையும்.

முகம் பொலிவை பெறுவதற்கு நாம் கஸ்தூரி மஞ்சளை சிறிதளவு எடுத்து அதனுடன் பதித்த மாவு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு பின்னர் இதை முகத்தில் பூசி சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவி விட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவை பெறும்.

கஸ்தூரி மஞ்சளுடன் பச்சை பயிறு மாவு, கடலை மாவு, பாலாடை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பூசி வரலாம். இந்த முறையை வாரத்திற்கு 2 முதல் 3 வரை செய்யலாம். இதன் மூலமாகவும் முகம் பொலிவை பெற்று தங்கம் போல ஜொலிக்க தொடங்கும்.

Exit mobile version