இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்று வந்தவர் உயிரிழப்பு : தமிழகத்தில் 2வது பலி!

0
118
Corona Infections Rate in Tamilnadu

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று கோர தாண்டவம் ஆடிவருகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை ஏற்று பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்னதாக டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅதில் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை இஸ்லாமிய மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இது தெரியாமல் பல மாநிலங்களில் இருந்து வந்த உறுப்பினர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தானாக முன்வந்து பரிசோதனையை செய்து கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டு கொண்டது.

இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டனர். அந்த பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயதான நபர் உயிரிழந்துள்ளார். இவர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர் என்று சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.