Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆகஸ்ட் 15 முதல் ரயில்களில் செல்ல இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை!

must-one-for-train-passengers-from-august-15

must-one-for-train-passengers-from-august-15

ஆகஸ்ட் 15 முதல் ரயில்களில் செல்ல இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை!

மகாராஷ்டிர அரசு உள்ளூர் ரயில் சேவையில் சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் பயணிக்கலாம் என அறிவிப்பு விடுத்துள்ளது.மகாராஷ்டிர தலைநகர் மும்பை நகரமானது இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும்.அதனால் மும்பையில் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருப்பர்.இதனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிர அரசு ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதி எனவும் அறிவித்துள்ளது.அத்தியாவசிய பணிகளை செய்பவர்கள் மட்டுமே தற்போது ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

தடுப்பூசி செலுத்தியவர்கள் ரயில்வே உதவி மையத்தை அணுகி பாஸ் பெற்றுக் கொண்டு ரயிலில் பயணிக்கலாம் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.பாஸ் பெறுவதற்கு மொபைல் அப்ளிக்கேஷனையும் அறிமுகம் செய்துள்ளது.ஆனால் அங்கு இன்னும் பல மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்குக் காரணம் தடுப்பூசி மையங்கள் சரியாக செயல்படாததே ஆகும்.மாநிலத்தில் மொத்தம் 300 தடுப்பூசி மையங்களில் 11 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளது.மேலும் பெட்ரோல் விலை உயர்வால் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.ரயிலில் சென்றால் தங்கள் பயணச்செலவை குறைக்க முடியும் எனவும் கூறுகின்றனர்.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திய நாளிலிருந்து 14 நாட்கள் கழித்தே பாஸ் வழங்கப்படும்.உதவி மையமானது மும்பையில் 109 ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.பயணிகள் வசதிக்காக 53 புறநகர் ரயில் நிலையங்களில் மொத்தம் 358 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ரயில் பயணிகள் பாஸ் வாங்குவதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழையும் அடையாள அட்டையினையும் காட்டி பாசை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.மேலும் உதவி மையமானது காலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version