Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இறுக்கமான குணத்திலிருந்து கலகலப்பான அழகிரி!

எப்பொழுதும் கடுகடுவென்று பேசும் அழகிரி இன்றைய தினம் ரொம்ப கலகலப்பாக பேசி இருக்கின்றார் பாட்டு ஆட்டம் நண்பர்களுடைய கூட்டம் என கலகலப்பான ஆள் தான் அழகிரி ஆனாலும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக பேட்டி என்று வந்தாலே கடுகடுவென மாறிவிடுவார் அழகிரி ஆனாலும் இன்றைய தினம் அப்படி கிடையாது.

கட்சி ஆரம்பிக்கும் தேதி தொடர்பான அறிவிப்பை வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தெரிவிப்பேன் என்று சமீபத்தில் அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது ஒரு தேதி அந்த தேதியை அறிவிப்பது ஒரு தேதி அந்த தேதி அறிவிப்பதற்கு ஒரு தேதி அந்த அறிவிப்பை வெளியிட ஒரு தேதி என அறிவிப்பதற்கு ஒரு தேதி இப்படி இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ரஜினியை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள் இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியும் அவ்வாறு ஒரு இழுத்தடிக்கும் வேலையை ஆரம்பித்து இருக்கின்றார்.

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் என்று அழகிரி தெரிவித்ததும் பாஜகவுடன் கூட்டணி அல்லது ரஜினியுடன் கூட்டணி இல்லை என்றால் தனி கட்சியா என்றெல்லாம் பரபரப்பான பேச்சுகள் எழுந்த நிலையில் இன்று மதுரை அழகர்கோவிலில் அழகிரியை சந்தித்த செய்தியாளர்கள் அரசியலில் என்னுடைய பங்களிப்பு என்றால் என்ன அர்த்தம் என்று கேட்க புதிய கட்சி கூட்டணி இன்னும் ஏன் ஓட்டு போடுவேன் அதுவும் பங்களிப்பு தானே என்று தெரிவித்து விட்டு சிரித்தார் அழகிரி.

ஆலோசனைக் கூட்டத்தில் ஆதரவாளர்களுடன் கலந்து பேசி அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தீர்கள் ஆலோசனை கூட்டம் எப்போது நடைபெறும் என்று கேட்டதற்கு ஆலோசனை கூட்டம் எப்போது என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார் அழகிரி.

மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை அவரிடம் கேட்க அதான் ஆலோசனைக் கூட்டம் எப்போது கூட்டப்படுகிறது என்று அதற்கும் ஒரு ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றோமே என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு சென்றார் ரஜினி கட்சியில் இணைய போகிறியர்களா என்று கேட்டதற்கு அவருடன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நடிக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் அவர்.

Exit mobile version