மலசிக்கல் பாதிப்பை சரி செய்யும் “கடுக்காய்”!! 100% பலன் கொடுக்கும் அற்புத இயற்கை வைத்தியம்!!
நம்மில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பாதிப்பாக மலசிக்கல் இருக்கிறது.தினந்தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைகளை பாலோ செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:-
கரிசலாங்கண்ணி – 1 கைப்பிடி
கடுக்காய் தோல் – 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் கரிசலாங்கண்ணி கீரையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அலசிக் கொள்ளவும்.பின்னர் இதை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து அதிக மருத்துவ குணம் கொண்ட கடுக்காயை எடுத்து அதை உடைத்து கொள்ளவும்.அதில் உள்ள கொட்டையை நீக்கி விட்டு தோலை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்துள்ள கரிசலாங்கண்ணி கீரை,டுக்காய் தோல் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.1/2 லிட்டர் தண்ணீர் சுண்டி 1/4 லிட்டராக வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.இந்த கடுக்காய் கஷாயத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகுவதன் மூலம் உடனடியாக பலன் கிடைக்கும்.