Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேர்த் திருவிழா!!

#image_title

புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருந்தி ராப்பட்டி முத்து மாரியம்மன் கோவில் புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினந்தோறும் முத்து மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நாளான தேர் திருவிழா என்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முத்துமாரியம்மன் சர்வ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் இருந்து அருளினால். இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆயிரக்கணாலும் கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் நான்கு வீதிகள் வழியாக வளம் வந்து மீண்டும் நிலை அடைந்தது இதன் பின்னர் தேரில் இருந்து முத்துமாரி அம்மன் எடுத்துவரப்பட்டு பின்னர் வீதி உலா நடைபெற்றது.இதில் ஆயிரம் கணக்கான பக்தர்கள் பங்கு பெற்றனர்.

Exit mobile version