Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முத்திய ராஜ்கிரண் குடும்ப விவகாரம்! முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்!

முத்திய ராஜ்கிரண் குடும்ப விவகாரம்! முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்!

முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் திரைபட நடிகர் ராஜ்கிரண் மனைவி ஆஜர்.

நடிகரும், இயக்குனருமான ராஜ்கிரண் வளர்ப்பு மகள் ஜீனத்பிரியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிவி சீரியல் நடிகர் முனீஸ்ராஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு தாய் கதீஜா மற்றும் ராஜ்கிரணுக்கு சம்மதம் இல்லாததால் வளர்ப்பு மகளை தனது பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது எனது வளர்ப்பு மகள் இல்லை எனவும் நடிகர் ராஜ்கிரண் அறிவித்தார்.

இதையடுத்து ஜீனத்பிரியா கணவர் முனீஸ்ராஜுடன் தனது முதல் தந்தை இளங்கோவனிடம் திருச்சி மாவட்டம், துறையூரில் தஞ்சம் அடைந்தனர். இந்தநிலையில் ராஜ்கிரண் மற்றும் தாய் கதீஜா ஆகியோர் குறித்து மகள் ஜீனத்பிரியா சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கதீஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இந்த புகார் குறித்து திருச்சி மாவட்டம், முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. இதில் ஜீனத்பிரியா, சீரியல் நடிகர் முனீஸ்ராஜ் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ராஜ்கிரண் மனைவி கதீஜா தரப்பினர் யாரும் வராததால் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. இதில் கதீஜா தரப்பினர் மற்றும் அவரது மகள் ஜீனத்பிரியா தரப்பினர் ஆஜராகி தங்களது தரப்பு நியாயங்களை விளக்கமளித்தனர்.

விசாரணையில் இருதரப்பினரும் சமூக வலைத்தளங்கள் வழியாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வீடியோ, ஆடியோ வெளியிடக்கூடாது. இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்படுமாயின் காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள் வாயிலாக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் போலீசாரின் அறிவுரைப்படி செயல்படுவதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். இதனால் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Exit mobile version