Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மட்டன் பிரியாணியா… கரப்பான் பூச்சி பிரியாணியா..? ஆசையுடன் சாப்பிட சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மட்டன் பிரியாணியா… கரப்பான் பூச்சி பிரியாணியா..? ஆசையுடன் சாப்பிட சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஓட்டலில் மட்டன் பிரியாணி சாப்பிட சென்ற நபருக்கு கரப்பான் பூச்சியுடன் பறிமாறிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் ஜங்சன் ரயில் நிலையம் எதிரே பல்வேறு உணவகங்கள் மற்றும் மற்ற கடைகளும் அமைந்துள்ளன. ஏற்கனவே இங்கு இருக்கும் உணவகங்களில் சுகாதாரமில்லை என்கிற புகார் அடிக்கடி எழுந்துவந்த நிலையில், நேற்று சேலத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது நண்பர்களுடன் ஜங்சனுக்கு எதிரே உள்ள ஒரு அசைவ ஓட்டலில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தனர்.

சிறிது நேரத்தில் ஓட்டல் ஊழியர் ஒருவர் மட்டன் பிரியாணியை கொண்டுவந்து மேசையில் வைத்தார். அதில் ஒரு பிளேட்டில் இருந்த பிரியாணியில் ஏதோ பூச்சியின் கால் தெரிவதுபோல் இருந்தது. உணவை கிளறி பார்த்தபோது முழு கரப்பான் பூச்சி இருப்பது தெரிந்ததால் முருகேசனின் நண்பர்கள் அதிர்ந்து போயினர். இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டபோது சரியான பதில் தராமல் மழுப்பியதுடன் அலட்சியமாக இருந்துள்ளனர்.

இதனையடுத்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் உடனடியாக ஓட்டலுக்கு விரைந்தனர். பின்னர் கரப்பான் பூச்சி கிடந்த 10 கிலோவிற்கும் மேலான பிரியாணியை அண்டாவுடன் குப்பையில் கொட்டினர். இதன் பிறகு மற்ற உணவுகளையும் சோதனை செய்த அதிகாரிகள் தற்காலிகமாக கடையை மூடி உணவு சமைக்கும் முறையை சரியான பாதுகாப்புடன் ஏற்பாடு செய்த பிறகு கடை திறக்கவேண்டும் என்று எச்சரித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அசைவ உணவு பிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version