Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடத்தப்பட்டதாக சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தி!! ஆனால் வெளிமாநிலம் பறந்த  சிறுமி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!  

My brother received a message on WhatsApp that he was kidnapped!! But the shocking information came out in the investigation of the girl who flew abroad!!

My brother received a message on WhatsApp that he was kidnapped!! But the shocking information came out in the investigation of the girl who flew abroad!!

கடத்தப்பட்டதாக சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தி!! ஆனால் வெளிமாநிலம் பறந்த  சிறுமி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!  

தன்னை யாரோ கடத்தி விட்டதாக தனது சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய சிறுமி வேறு மாநிலத்துக்கு சென்றதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் உள்ள பஹல்கர் என்ற பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு பணியை செய்து வந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல சிறுமி வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியை பல்வேறு இடங்களில் சென்று தேடி உள்ளனர். அப்போது அந்த சிறுமியின் சகோதரன் செல்லுக்கு வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் ரெக்கார்ட் ஒன்று வந்துள்ளது. அதை பார்த்த போது அந்த சிறுமி தன்னை யாரோ கடத்தி விட்டதாக கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ந்த அவரின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை அடிப்படையாக கொண்டு விசாரணையை தொடங்கினர்.

விசாரணை முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் அந்த சிறுமி  ஒரு இளைஞரை காதலித்ததும், பின்னர் அவருடன் மும்பையில் இருந்து மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவிற்கு விமானம் மூலம் பறந்ததும் தெரிய வந்தது.

ஆனால் தான் காதலனுடன் செல்வது தனது பெற்றோருக்கு தெரிய கூடாது என்பதற்காக சிறுமி கடத்தல் நாடகம் ஆடியதும் அம்பலமானது. இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் அவரது காதலனை தேடி கொல்கத்தாவிற்கு சென்றுள்ளனர். அவர்களை பிடித்த பிறகே உண்மையான காரணம் தெரிய வரும்.

Exit mobile version